search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்"

    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க கோரி நாளை தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம் என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரிகளில் தர்ணா போராட்டம் நடைபெறும். தொடர்ந்து வருகிற 24-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும். வருகிற 27-ந் தேதி முதல் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தமிழக அரசு சார்பில் நடக்கும் அனைத்து விதமான ஆய்வுக்கூட்டங்களும் புறக்கணிக்கப்படும். 

    தொடர்ந்து செப்டம்பர் 12-ந் தேதி சென்னையில் அனைத்து மருத்துவர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டு கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும். அதன்பிறகும் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்றால் செப்டம்பர் 21-ந் தேதி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகளில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அப்போது முக்கியமான அறுவை சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை போன்றவைகளை மேற்கொள்ள நாங்களே ஒரு மருத்துவக்குழுவை ஏற்படுத்தி நோயாளிகள் பாதிக்காத வகையில் போராட்டம் முன்னெடுத்து செல்லப்படும். எங்களது போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×